கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான 18 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பான வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இதனை அடுத்து தங்கள் மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து 18 பேர் தாக்கல் செய்த மனு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்த போது இந்த வழக்கு ஜனவரி 6ஆம் தேதி விசாரணைக்கு நடைபெறும் என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கள்ளக்குறிச்சி கள்ளச்சார வழக்கில் 18 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கைதானவர்கள் 6 மாதங்களுக்கு மேல் சிறையில் இருப்பதால், இனி அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் இருப்பதில் என்ன தேவை உள்ளது? என நீதிமன்றம் கேள்வி. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.