சட்டசபையில் இருந்து வெளியேறிய அதிமுக எம்எல்ஏக்கள் யார் அந்த சார்? பதில் சொல் என சட்டசபைக்கு வெளியே கோஷமிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று நடைபெற்று வரும் நிலையில், ஆளுநர் ரவி உரையை வாசிக்காமல் வெளியேறிவிட்டார். இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து அதிமுக எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பிய நிலையில் அவர்கள் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனும் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சட்டசபைக்கு வெளியே அதிமுக எம்எல்ஏக்கள் பதாகைகளை ஏந்தியபடி சட்டசபையில் நடந்தவற்றை பேட்டி அளித்தனர். அதன்பின், "பதில் சொல், பதில் சொல், யார் அந்த சார்? என பதில் சொல்" என கோஷமிட்டபடி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டசபைக்கு வெளியே கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.