பேரவை நிகழ்வுகள் மக்களுக்கு தெரியவே கூடாது என்று மொத்தமாக துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு என அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கான காட்சி இணைப்பு ஊடகங்களுக்கு மறுக்கப்பட்டது ஏன்? பேரவை நிகழ்வுகள் மக்களுக்கு தெரியவே கூடாது என்று மொத்தமாக துண்டித்துவிட்ட ஸ்டாலின் மாடல் அரசு!
"யார் அந்த SIR என்ற கேள்வியை எதிர்கொள்ள அவ்வளவு பயமா முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடப்பது "அவசர நிலை" ஆட்சி என்று தோழர் சொன்னது_உண்மைதான்!," என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக இன்று சட்டசபை கூட்டம் கூடியவுடன் அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். இதனை அடுத்து ஆளுநரை உரையாற்ற விடாமல் அதிமுகவினர் முழக்கமிட்டதாக கூறிய சபாநாயகர் அவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.
இதை யடுத்து பதாகைகளை ஏந்தியபடி சட்டசபையை விட்டு அதிமுகவினர் வெளியேறினர். இதனால் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.