கள்ளச்சாராய விவகாரம்: விழுப்புரம் மாவட்ட எஸ்.பி பணியிடை நீக்கம்! செங்கல்பட்டு எஸ்.பி பணியிட மாற்றம்!

Webdunia
திங்கள், 15 மே 2023 (17:34 IST)
மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கமும் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பணியிட மாற்றமும் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளச்சாராய விவகாரத்தில் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா பணியிடை நீக்கமும் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளர் பிரதீப் பணியிட மாற்றமும் செய்யப்பட்டுள்ளனர். மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு மதுவிலக்கு பிரிவு துணை கண்காணிப்பாளர்களையும் சஸ்பெண்ட் செய்ய தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் இந்த அதிரடி உத்தரவால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கள்ளச்சாராய வியாபாரிகள் 203 பேர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோல் இந்த விவகாரத்தில் செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் தற்போது விழுப்புரம் காவல்துறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்தும் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கண்காணிப்பாளரை பணியிட மாற்றம் செய்தும் தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல போர்களை முடிவுக்கு கொண்டு வந்து ட்ரம்புக்கு நோபல் பரிசு இல்லையா? வெள்ளை மாளிகை கண்டனம்

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம்.. பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்.!

நோபல் கிடைக்காவிட்டாலும் மகிழ்ச்சியில் ட்ரம்ப்! வெனிசுலாதான் காரணமா?

20 லட்சம் கடன் தருவதாக கூறி லட்சக்கணக்கில் ஏமாந்த நபர்.. மோசடியில் இருந்து தப்பிப்பது எப்படி?

குறைவது போல குறைந்து மீண்டும் உயர்ந்த தங்கம்! தற்போதைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments