மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 6 பேர் நேற்று மரணம் அடைந்த நிலையில் இன்று மேலும் ஒருவர் மரணம் அடைந்ததால் மரணம் எண்ணிக்கை அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி சற்று முன் மரண எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கள்ளச்சாராயம் குடித்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்தவர்களின் மரணம் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உடனடியாக விழுப்புரம் புறப்பட்டு சென்றார். சென்னையில் இருந்து சாலை மார்க்கமாக அவர் விழுப்புரம் செல்வதாகவும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிகிறது.
முதலமைச்சருடன் அமைச்சர்கள் பொன்முடி ஏ.வ. வேலு ஆகியோர்களும் விழுப்புரம் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்துள்ள முதல்வர் ஸ்டாலின் தற்போது நேரில் சென்று ஆறுதல் கூற உள்ளதாகவும் தெரிகிறது
மேலும் கள்ளச்சாராயத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.