கள்ளச்சாராய மரணத்திற்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த ஒன்பது பேர் பரிதாபமாக மரணமடைந்த நிலையில் திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.
கள்ள சாராயம் குடித்தவர்கள் மரணமடைந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது என்றும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று சொல்லி போய் வருவது தற்போது நிரூபணம் ஆகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
பொம்மை முதல்வர் மற்றும் திறமையற்ற முதல்வர் ஆளுகின்ற மாநிலத்தில் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முன்கூட்டியே சரியான நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த மரணத்தை தடுத்திருக்கலாம் என்றும் இந்த மரணங்களுக்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்