மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 16 பேர்களில் ஒன்பது பேர் பரிதாபமாக மரணமடைந்த நிலையில் கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
இதனை அடுத்து இன்று ஒரே நாளில் நான்கு மாவட்டங்களில் 203 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
விழுப்புரம் கடலூர் நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிரடியாக கள்ளச்சாராய வேட்டை நடத்தியதில் 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 203 கள்ள சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் 5091 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தலைமை அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.