அ.தி.மு.க. கூட்டணியில் எழும்பூர் (தனி) தொகுதியில் போட்டியிடும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் தனது சொத்து பட்டியலை தாக்கல் செய்துள்ளார்.
அதில் தனது பெயரில் ரூ.4 கோடியே 22 லட்சத்து 6 ஆயிரத்து 504-க்கும், மனைவி பிரிசில்லா பாண்டியன் பெயரில் ரூ.5 கோடியே 62 லட்சத்துக்கும், மகன் வியங்கோ பாண்டியன் பெயரில் ரூ.57 லட்சத்து 28 ஆயிரத்துக்கும், மகள் வினோலின் நிவேதா பெயரில் ரூ.28 லட்சத்து 19 ஆயிரத்துக்கும் வங்கிக்கணக்கில் பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது பெயரில் ரூ.1 கோடியே 14 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.80 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துக்களும் உள்ளன என்றும், மனைவி பெயரில் ரூ.1 கோடியே 90 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ.75 லட்சத்து 43 ஆயிரம் மதிப்பில் அசையா சொத்துகளும், மகன் பெயரில் ரூ.16 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளும், ரூ35 லட்சம் மதிப்பில் அசையா சொத்துகளும், மகள் பெயரில் ரூ.17 லட்சத்து 22 ஆயிரம் மதிப்பில் அசையும் சொத்துகளும் உள்ளன என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும், தனது பெயரில் வங்கிக்கடன் இல்லை என்றும், மனைவி பெயரில் ரூ.10 லட்சம் வங்கிக்கடன் இருப்பதாகவும் கூறி உள்ளார். தன் மீது 2 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.