வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதனால் தமிழக அரசியல்களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் திமுக சார்பில் சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட இன்று உதயநிதி வேட்பு மனுதாக்கல் செய்தார்.
அப்போது மனுவில் அவரது சொத்துகள் மற்றும் வருமானங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தன.
அவை பின்வருமாறு:
உதயநிதி ஸ்டாலின் பெயரில் 21 கோடியே 13 லட்சத்து 9 ஆயிரத்து 650 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும், 6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 553 ரூபாய் மதிப்பிலான அசையாச்ச்சொத்துகளும் இருக்கின்றன.
அதேபோல் அவரது மனைவி கிருத்திகாவின் பெயரில் 1,15,35,222 கோடி மதிப்பிலான அசையாச்சொத்துகள் இருப்பதாகவும், கடந்த ஆண்டில் உயதநிதி ஸ்டாலின் கிடைத்த வருமானம்ரூ. 4,89,000 எனவும்,அவரது மனைவி கிருத்திகாவிற்கு ரு.17,44,000 எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களுக்காக உதயநிதி போராடியபோது சட்டத்தை மீறியதாக 22 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.