Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓ.பி.எஸ் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 509% அதிகரிப்பு!

Advertiesment
ஓ.பி.எஸ் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் 509% அதிகரிப்பு!
, செவ்வாய், 16 மார்ச் 2021 (12:02 IST)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 12ஆம் தொடங்கியது. அதில் மனுவை தாக்கல் செய்த முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது சொத்துமதிப்புகளை பதிவு செய்தனர். அதில் கமல், சீமான், தினகரன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவரையும் சொத்து மதிப்புகள் குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது அடுத்தபடியாக தமிழக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு பேசும் பொருளாகியுள்ளது. அதாவது, ஓ.பி.எஸ் மற்றும் அவரது மனைவி இருவரின் பெயரிலும் உள்ள ஒட்டு மொத்த அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் மதிப்பு 2016ம் ஆண்டு வரை 1.53 கோடியாக இருந்தது தற்பொழுது 7.82 கோடியாக அதிகரித்து உள்ளது. 
 
ஓ.பன்னீர்செல்வத்தின் மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ. 61,19,162 ரூபாயும்
 
மனைவி விஜயலெட்சுமியின் மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ. 4,57,52,415 
 
மேலும்,  ரூ 48,85,424 மதிப்புள்ள  மஹிந்திரா ஜினியோ, டொயோடா  , இன்னோவா  என மூன்று கார்கள் உள்ளது. 
 
அதேபோல் அவரது மனைவியுடம் ரூ. 43,34,377 மதிப்புள்ள இரண்டு டெம்போ டிராவலர் உள்ளது. 
 
அசையா சொத்து மதிப்பு என்று பார்த்தால் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஏதும் இல்லை.
 
அவரது மனைவி பெயரில் அசையா சொத்து , ரூ 2 கோடியே 63 லட்சத்து 75 ஆயிரத்து 106 ரூபாய் மதிப்பில் உள்ளது. என அவரின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 509% அதிகரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேட்பு மனு தாக்கல் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்! – சமக சரத்குமார் கோரிக்கை!