Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுவது ஏன்? எப்படி நடக்கும்? ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா விளக்கம்..!

Advertiesment
amutha ias

Siva

, திங்கள், 14 ஜூலை 2025 (12:57 IST)
தமிழகத்தில் பொதுமக்களின் தேவைகளையும், குறைகளையும் விரைந்து நிவர்த்தி செய்யும் நோக்கில், 'உங்களுடன் ஸ்டாலின்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் எதற்காக, எப்படி, ஏன் நடத்தப்படுகிறது என்பது குறித்த விரிவான விளக்கத்தை, சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த  அமுதா ஐ.ஏ.எஸ்., விளக்கம் அளித்தார். அவர் மேலும் கூறியதாவது:  அளித்தார்.
 
தமிழக அரசின் திட்டங்கள் மக்களை விரைவாகவும், முறையாகவும் சென்றடைவதை உறுதி செய்ய நான்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் மாவட்டங்களுக்கு செல்லும்போது பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று வருகிறார். அதேபோல், மக்களின் குறைகளை கேட்டறிய 1100 என்ற எண்ணுடன் 100 பேர் கொண்ட உதவி மையம் செயல்பட்டு வருகிறது. அரசின் சேவைகளை பெறுவதில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, 'மக்களுடன் முதல்வர்' திட்டம் தொடங்கப்பட்டது.
 
அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மக்களிடையே விரைவாக சென்றடைய வேண்டும் என்று தமிழக முதல்வர் விரும்புகிறார். மக்களின் புகார் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் 1 கோடியே 5 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, 1 கோடியே 1 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
 
'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் பெறப்படும் மனுக்களுக்கு அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். உரிய ஆவணங்களுடன் முகாம்களுக்கு வந்தால், உங்கள் கோரிக்கை உடனடியாக நிறைவேற்றி தரப்படும். முகாம்கள் நடக்கும் ஒரு வாரத்திற்கு முன்பு வீடு, வீடாக சென்று மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். வாரத்தில் நான்கு நாட்கள் முகாம் நடைபெறும். இத்திட்டம் நவம்பர் மாதம் வரை செயல்படுத்தப்படும். இவ்வாறு அமுதா ஐ.ஏ.எஸ் தெரிவித்தார்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமிரா.. ஒவ்வொரு பெட்டியிலும் 4 கேமிராக்கள்.. ரயில்வே அறிவிப்பு..!