தி.மு.க. அரசுக்கு இப்போது வருவது போன்ற கஷ்டம் முன் எப்போதும் வந்ததில்லை" என அமைச்சர் கே.என்.நேரு வருத்தத்துடன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் திருச்சி அருகே மணப்பாறையில் நடந்தது. இதில் பேசிய அமைச்சர் நேரு, "இனிமேல் பா.ஜ.க.வுடன் சேர மாட்டோம் என்ற அ.தி.மு.க.வினர் மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளனர். தங்கள் மீதான வழக்குகளை முடித்துக் கொள்வதற்காகக் கட்சியை அதிமுகவினர் அடகு வைத்து விட்டார்கள். தமிழகத்தில் புதிதாக ஒருவர் வந்துள்ளார், அவர் வரும்போது நான் தான் முதல்வர் என்று கூறிக்கொண்டிருக்கிறார்" என்று அ.தி.மு.க. மற்றும் புதியதாக அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜயை மறைமுகமாக விமர்சித்தார்.
ஒருபுறம் அ.தி.மு.க.வின் கடந்த கால நிர்வாகம் சரி இல்லாததால் நிதி நிலைமை மோசமாக உள்ளது. இன்னொரு புறம் கொரோனா பாதிப்பை தடுக்க இரண்டு ஆண்டுகள் செலவு செய்ய வேண்டிய நிலை இருந்தது. மத்திய அரசு தமிழகத்துக்கு தரவேண்டிய நிதியை தராமல் இருக்கிறது. 100 நாள் வேலைக்கும், புதிய கல்வி கட்டுவதற்கும் தரவேண்டிய 3500 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி வைத்துள்ளது. இந்த ஆண்டுக்கான 4000 கோடி ரூபாயும் வரவில்லை.
மத்திய அரசிடம் ஒவ்வொரு முறையும் போராடிதான் நிதியை பெற வேண்டி உள்ளது. கடுமையான நிதி நெருக்கடியிலும் தமிழக முதல்வர் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்" என்று அமைச்சர் நேரு தெரிவித்தார்.