மதுரையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய தலைவர் விஜய் வழக்கம்போல குட்டி ஸ்டோரி ஒன்றை தொண்டர்களுக்கு சொன்னார்.
அந்த கதையானது : ஒரு நாட்டுல ஒரு ராஜா தனக்கு பக்கபலமாக இருக்கக்கூடிய ஒரு தளபதியை தேடுறார். அதுக்கான சரியான தகுதி உள்ள ஒரு 10 பேர் செலக்ட் ஆகுறாங்க. அவங்கள் எல்லாரையும் டெஸ்ட் பண்ணி பார்க்க ராஜா 10 பேர்கிட்டயும் விதை நெல்லை கொடுக்கிறார். 3 மாதங்கள் டைம் தறார். நெல்லை நல்லா வளர்த்து கொண்டு வரணும்னு சொல்றார். 3 மாதம் கழிச்சு எல்லாரும் வறாங்க.
ஒருத்தர் நெல்லை ரொஉ ஆள் உயரத்துக்கு வளர்த்திருந்தார். இன்னொருத்தர் தோள் உயரத்துக்கு வளர்த்திருந்தார். இப்படியே ஒவ்வொருவராக 9 பேரும் நெல்லை ஒரு உயரத்துக்கு வளர்த்திருந்தாங்க. ஆனா ஒருத்தர் மட்டும் வெறும் தொட்டியை கொண்டு வந்தார். ஏன் என ராஜா கேட்டார். அதற்கு அவர் “நானும் தண்ணி ஊத்தி பாக்குறேன்.. உரம் போட்டு பாக்குறேன். என்ன பண்ணினாலும் வளரவே மாட்டேங்கிறது ராஜா” என சொன்னார். ராஜா அவரை கட்டியணைத்து இனி நீதான் என் தளபதி என சொன்னாரு.
ஏனென்றால் அந்த 10 பேர்கிட்டயும் ராஜா கொடுத்தது அவித்த நெல். அது முளைக்கவே முளைக்காது. 9 பேரும் வேறு நெல்லை விதைத்து ராஜாவையும், மக்களையும் ஏமாத்த பாத்தாங்க. ஆனால் ஒருத்தர் மட்டும் உண்மையை உடைச்சுட்டார்.
ஒரு நாட்டுக்கு திறமை எந்தளவு முக்கியமோ அதே அளவுக்கு உண்மையும் நேர்மையும் முக்கியம். இப்போ நீங்க எல்லாரும்தான் ராஜா. நீங்கள் தேர்வு செய்யப்போற உங்கள் தளபதி யாரு?” என கேள்வி எழுப்பி பேசியுள்ளார்.
Edit by Prasanth.K