Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திடீர் நெஞ்சுவலி.. தவெக மாநாட்டுக்கு சென்ற தொண்டர் பரிதாப பலி..!

Advertiesment
தவெக

Mahendran

, வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (16:47 IST)
மதுரையில் நடைபெற்ற தவெக மாநாட்டிற்கு சென்ற தொண்டர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னையில் இருந்து மாநாட்டிற்கு சென்ற பிரபாகரன் என்ற தொண்டர், சக்கிமங்கலம் என்ற இடத்தில் சிறுநீர் கழிக்க சென்றபோது மயக்கமடைந்தார். உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
 
இந்த நிலையில் இன்று நடைபெற்று தவெக மாநாட்டில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். காலை 10 மணிக்கே மாநாட்டு பந்தலில் உள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பின. கடும் வெயில் காரணமாக 10 தொண்டர்கள் மயக்கமடைந்தனர். அவர்களில் ஒருவர் மதுரை அரசு மருத்துவமனையிலும், 9 பேர் வளையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் அனுமதிக்கப்பட்டனர்.
 
தவெக மாநாட்டிற்கு சென்ற தொண்டர் மாரடைப்பால் பலியான சம்பவம், தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’பெரியாரின் பேரன் வர்றான்’.. தவெக கொள்கை பாடல் வெளியீடு..!