இன்று மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ள நிலையில் விஜய்யின் தாயார் ஷோபா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலில் அடியெடுத்து வைத்த விஜய், விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக முதல் மாநாட்டை நடத்தி முடித்தார். அதை தொடர்ந்து இன்று மதுரையில் இரண்டாவது மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள நேற்று இரவு முதலே ஏராளமான தவெக தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றி பெற அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் வாழ்த்தியுள்ளார். அதில் அவர் “திரையில் உன்னை பார்த்து உயர்த்திய தாய்மார்கள், தம்பி, தங்கைகள் அரசியல் வெற்றிக்கு துணை நிற்கட்டும். வரவிருக்கும் தேர்தல் உன் இமாலய வெற்றியை காட்டும், நீ அரியணை ஏறும் நாள் வரும்.. அது உன் தொண்டர்களின் திருநாள்.
தமிழக வெற்றிக் கழகம் தடைகளை வெல்லும் கழகம் என்று காட்டு.. நேர்மையான தலைவன் என்பதற்கு நிதான் எடுத்துக்காட்டு. உன்னோடு வரும் தொண்டர் படை இந்த நாட்டில் வேறு யாருக்கும் இல்லை. உன் வெற்றிக்கு வானமே எல்லை. வாழ்த்துக்கள் விஜய்” என வாழ்த்தியுள்ளார்.
Edit by Prasanth.K