தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சமீபத்தில் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகி வந்த நிலையில் மீண்டும் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், தர்மபுரி, சேலம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஆறு மாவட்டங்களின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.