கடலூரில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் பணத்தை திருப்பி அளிக்காவிட்டால் அரசின் சலுகைகள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதம மந்திரியின் கிசான் விவசாயிகள் திட்டத்தில் விவசாயிகள் அல்லாத பலர் முறைகேடாக பணம் பெற்ற விவகாரம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாவட்டங்கள்தோறும் முறைகேடாக பணம் பெற்றவர்களிடம் பணத்தை திரும்ப வசூலித்து வருகின்றனர்.
கடலூரில் 14.26 கோடி ரூபாய் அளவுக்கு கிசான் திட்டத்தில் முறைகேடு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 11 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பணம் பெற்றவர்கள் தாமாக முன்வந்து பணத்தை கொடுக்கும்படியும், அவ்வாறு செய்யாது போனால் அரசின் அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.