Publish Date: Wed, 21 Oct 2020 (10:50 IST)
Updated Date: Wed, 21 Oct 2020 (10:51 IST)
கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் எகிறிய தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் கடந்த மாதம் தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கம் விலை தற்போது குறைந்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.176 உயர்ந்து ரூ.37,640க்கு விற்பனை ஆகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.22 உயர்ந்து ரூ.4,705க்கு விற்பனை ஆகிறது.