Publish Date: Wed, 21 Oct 2020 (13:04 IST)
Updated Date: Wed, 21 Oct 2020 (13:06 IST)
சென்னையில் இருந்து செல்போன்கள் ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த பூந்தமல்லியிலிருந்து செல்போன்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று மும்பை நோக்கி புறப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியில் ஓசூர் அருகே லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுனர் மற்றும் உதவியாளர் உபாதை கழித்த நேரத்தில் அவர்களை சுற்றி வளைத்த கும்பல் அவர்களை தாக்கி விட்டு கண்டெய்னர் லாரியை திருடி சென்றுள்ளனர். பிறகு அதிலிருந்த செல்போன்களை வேறு கண்டெய்னர் லாரிகளுக்கு மாற்றி எடுத்துக் கொண்டு தப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்கள் மொத்தமாக ரூ.15 கோடி மதிப்புடையது.
முன்னதாக இதே போன்று செல்போன் கண்டெய்னர் ஆந்திர மாநிலத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்த நிலையில் தற்போது சென்னையிலும் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.