பஹ்ரைனில் நடைபெற்ற கபடி போட்டியில் இந்திய அணி தங்கம் வென்ற நிலையில், அந்த அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
பஹ்ரைனில் நடைபெற்ற 3rd Asian Youth Games-ல், இந்திய கபடி அணி Boys மற்றும் Girls பிரிவில் தங்க பதக்கங்களை வென்றது அறிந்து மகிழ்ந்தோம்.
Girls அணியில் சென்னை கண்ணகி நகரை சேர்ந்த தங்கை கார்த்திகாவும், Boys அணியில் தம்பி அபினேஷ் மோகன்தாஸும் இடம்பெற்றிருந்தது நமக்கெல்லாம் பெருமை.
தம்பி அபினேஷ் தேனியில் உள்ள நமது SDAT விடுதியில் தங்கி பயிற்சி எடுத்தவர் என்பதும், தங்கை கார்த்திகா எளிய பின்புலத்தில் இருந்து புறப்பட்டு இந்த உயரத்தை அடைந்திருக்கிறார் என்பதும் கூடுதல் சிறப்பு.
சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ள கார்த்திகா மற்றும் அபினேஷை வாழ்த்தி மகிழ்கிறோம். இவர்கள் இருவரும் மென்மேலும் பல வெற்றிகளை குவிக்கட்டும்!
இவ்வாறு துணை முதல்வர் உதயநிதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.