Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எவ்வளவு மழை வந்தாலும் தாக்குப்பிடிப்போம்! வடசென்னையில் ஆய்வு மேற்கொண்ட உதயநிதி உறுதி!

Advertiesment
Udhayanithi

Prasanth K

, திங்கள், 27 அக்டோபர் 2025 (12:11 IST)

சென்னையில் கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மழையை தாக்குப்பிடிக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் தீவிர புயலாக இன்று வலுவடைய உள்ள நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதலாகவே சென்னையில் மழைப்பொழிவு அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் இன்று வடசென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்தார். வியாசர்பாடி கால்வாய் தொடங்கும் இடமான ஜீரோ பாயிண்டில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார். கடுமையான மழைப்பொழிவையும் சமாளிக்கும் வகையில் பணிகள் அமைய வேண்டும் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எவ்வளவு மழை பெய்தாலும் அவற்றை தாக்குபிடிக்கும் வகையிலான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீன கடலில் அடுத்தடுத்து விழுந்த அமெரிக்க விமானம், ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?