Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஓவர் நைட்ல ஒன்னும் நடக்கல, முருகன் அண்ட் கோ-வின் 5 நாள் சாலிட் ப்ளானிங்!!

ஓவர் நைட்ல ஒன்னும் நடக்கல, முருகன் அண்ட் கோ-வின் 5 நாள் சாலிட் ப்ளானிங்!!
, செவ்வாய், 15 அக்டோபர் 2019 (10:56 IST)
5 நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக சுவரில் ஓட்டை போட்டு, லலிதா ஜுவல்லரிக்குள் நுழைந்து திருடியதாக விசாரணையில் தெரிவிவந்துள்ளது. 
 
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளையை குறித்து போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், திரூவாரில் மணிகண்டன் என்பவர் 5 கிலோ நகையுடன் கைதானார். 
 
அவருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட சீராத்தோப்பு சுரேஷ் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்துக்கு முருகன்தான் தலைவன் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சுரேஷ், செங்கம் கோர்ட்டிலும், முருகன் பெங்களூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் சரணடைந்தார். 
webdunia
இந்நிலையில், சுரேஷை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், விசாரணையில் சில திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஆம், முருகன், சுரேஷ், கணேஷ் ஆகியோர் நீண்ட நாட்களாக கடையை நோட்டமிட்டு இரவு நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக சுவரில்ல் துளையிட்டு வந்துள்ளனர். 
 
அதாவது, செப் 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை இரவு நேரங்களில் கொள்ளைக்காக இவர்கள் ஆயத்தமாகி வந்துள்ளனர். சம்பவ நாளன்று முருகன் மற்றும் சுரேஷ் கடைக்குள் செல்வதாக இருந்தனர். ஆனால், சுரேஷால் அந்த துளைக்குள் நுழைய முடியாத காரணத்தால் முருகனோடு கணேஷ் முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்துள்ளான் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: சீமான் நேரில் ஆஜராக சம்மன்