Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரதமர் மோடியின் உறவுக்கார பெண்ணிடம் கொள்ளை!: டெல்லியில் பரபரப்பு

Advertiesment
பிரதமர் மோடியின் உறவுக்கார பெண்ணிடம் கொள்ளை!: டெல்லியில் பரபரப்பு
, ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (10:41 IST)
பிரதமர் மோடியின் சகோதரர் மகளிடம் சில ஆசாமிகள் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பிரதமர் மோடியின் சகோதரர் மகள் தமயந்தி பென் மோடி. இவர் அமிர்தசரஸில் வாழ்ந்து வருகிறார். ஒரு வேலையாக டெல்லிக்கு சென்ற அவர் அங்குள்ள குஜராத் சமாஜ் பவனில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார்.

டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு செல்வதற்காக ஆட்டோவில் சென்று இறங்கியிருக்கிறார். அப்போது அந்த பகுதியில் வந்த மர்ம ஆசாமிகள் இருவர், பென் கையிலிருந்த கைப்பையை பறித்து கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து திருடன் ஒருவனை பிடித்து திருடப்பட்ட பொருட்களை மீட்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீமானுக்கு ரஜினி மேல அப்படி என்ன காண்டு? போர இடத்துலலாம் கிழிக்கிறாரூ...