திருச்சி லலிதா ஜுவல்லரிக்குள் மாஸ்ட் அணிந்து புகுந்தது யார் என்ற தகவலை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள பிரபலமான லலிதா ஜுவல்லரியில் ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளையை குறித்து போலீஸார் விசாரணை நடத்திவந்த நிலையில், திரூவாரில் மணிகண்டன் என்பவர் 5 கிலோ நகையுடன் கைதானார்.
அவருடன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்ட சீராத்தோப்பு சுரேஷ் என்பவரை போலீஸார் தேடி வந்தனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்துக்கு முருகன்தான் தலைவன் என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சுரேஷ், செங்கம் கோர்ட்டிலும், முருகன் பெங்களூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலும் சரணடைந்தார்.
இந்நிலையில் கடைக்குள் புகுந்து திருடியது மணிகண்டன் மற்றும் சுரேஷ் என நினைக்கப்பட்டிருந்த நிலையில் திருச்சி லலிதா ஜுவல்லரியில் விலங்குகளின் வடிவம் கொண்ட முகமூடி அணிந்து முருகனும் கணேசனும் கொள்ளையடித்தது அம்பலமாகியுள்ளது.
அதோடு, திருச்சியில் கடந்த ஆண்டு பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்திலும் முருகனுக்கு தொடர்பு உள்ளது என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது என காவல்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.