சென்னை, கே.கே. நகர், நெசப்பாக்கத்தை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்துவந்த இவர்களின் உறவில், இரண்டு வாரங்களுக்கு முன்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அந்த இளைஞர் மாணவியுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அந்த இளம் பெண், தற்செயலாக கே.கே. நகர் பகுதியில் காதலன் தனது தாயுடன் நடந்து செல்வதைக் கண்டார். உடனே அவரை வழிமறித்து, "ஏன் என்னிடம் பேசுவதில்லை?" என்று கேட்டு, தான் வைத்திருந்த கம்பால் இளைஞரைத் தாக்கினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர் ஓட, மாணவியும் அவரை துரத்திச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், அங்கிருந்தவர்களும், இளைஞரின் தாயும் மாணவியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.