Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீடு தேடி போய் கமலை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்!.. வைரல் புகைப்படங்கள்...

Advertiesment
Kamalhassan

Bala

, சனி, 8 நவம்பர் 2025 (13:37 IST)
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் கமல், நடிகனாக மட்டுமில்லாமல் கதாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பல அவதாரங்களை எடுத்தவர் இவர். 5 வயது முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமா தரத்தை உயர்த்த பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்யும் நபர் இவர். 
 
சில வருடங்களுக்கு முன் அரசியலுக்கும் வந்தார். டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் அவர் அரசை விமர்சனம் செய்ய ‘அரசியலுக்கு வந்துவிட்டு கமல் பேசட்டும்’ என அரசியல் கட்சிகள் சொல்ல ‘மக்கள் நீதி மய்யம்’ என்கிற கட்சியை துவங்கி சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட்டார். ஆனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. கோவையில் போட்டியிட்ட கமலும் வெற்றிபெறவில்லை.
 
தற்போது திமுகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அதனால் அவருக்கு எம்.பி. பதவியும் கிடைத்தது. இந்நிலையில்தான் கமல் நேற்று தனது 71வது பிறந்தநாளை கொண்டாடினர். எனவே, திரையுலகினரும், அரசியல் தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
 
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது வீட்டிற்கு வந்து வாழ்த்திய புகைப்படங்களை கமலே தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ‘என்னுடைய அழைப்பை ஏற்று எனது வீட்டிற்கு வந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசனையும்  கௌரவப்படுத்திய தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் திரு. ஸ்டாலின் மற்றும் திருமதி துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும்,  மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய இளவல் திரு. உதயநிதி ஸ்டாலின் மற்றும் என் திரு. சபரீஸன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 
webdunia
 
பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடன் விலகி இருப்போம். ஆனால், கலைஞர் உடனான எனது உறவு 3 தலைமுறைகளை தாண்டிய நெருக்கம் கொண்டது. நிபந்தனைகளற்ற அன்பு மற்றும் அளவு கடந்த மரியாதையால் பிணைத்து கட்டப்பட்டது. அதை உறுதி செய்யும்படி இந்த சந்திப்பு நேற்று என் இல்லத்தில் நடந்தது’ என பதிவிட்டிருக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிளகாய் பொடி தூவி நகைக்கடையில் கொள்ளையடிக்க முயற்சித்த பெண்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்..!