நடிகை அனுஷ்கா ஷர்மா, 2018-க்கு பிறகு பெரிய திரையில் தோன்றவில்லை. அவர் கிரிக்கெட் வீராங்கனை ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான 'சக்தா எக்ஸ்பிரஸ்' படப்பிடிப்பை 2022-ல் முடித்திருந்தும், இன்னும் வெளியாகவில்லை.
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் அண்மைய உலகக்கோப்பை வரலாற்று வெற்றிக்கு பிறகு, படத்தின் தயாரிப்பாளர்கள், திரைப்படத்தை வெளியிடக்கோரி அதன் உரிமைகளை கொண்டுள்ள நெட்ஃப்ளிக்ஸ் இந்தியா உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர். "ஜுலன் கோஸ்வாமி போன்ற ஒரு ஜாம்பவானின் கதை பார்வையாளர்களை சென்றடைய வேண்டும்," என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நெட்ஃப்ளிக்ஸ் தலைவர்களுக்கு படத்தின் இறுதி வடிவம் திருப்தியளிக்காதது மற்றும் பட்ஜெட் அதிகரிப்பு போன்ற காரணங்களால் திரைப்படம் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் சமீபத்திய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை வெற்றி காரணமாக, நெட்ஃப்ளிக்ஸ் குழுமம் இது குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாகவும், இந்த மாத இறுதிக்குள் முடிவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.