நடிகை சமந்தா மற்றும் பிரைம் வீடியோ நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளர் ராஜ் இடையேயான காதல் வதந்திகள் தற்போது வலுப்பெற்றுள்ளன. இருவரும் தங்கள் உறவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றாலும், அவர்களின் தொடர்ச்சியான பொது தோற்றங்கள் இந்த ஊகங்களுக்கு மேலும் தூண்டுகோலாக அமைந்தன.
இந்நிலையில், சமந்தா தனது புதிய வாசனை திரவிய பிராண்டான 'சீக்ரெட் அல்கெமிஸ்ட்' வெளியீட்டு விழாவின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், ராஜ் உடன் அவர் மிகவும் நெருக்கமாக, ராஜ் இடுப்பை பிடித்திருக்க அவரை அணைத்தவாறு இருக்கும் புகைப்படம், அவர்களின் உறவு உறுதி செய்யப்பட்டதற்கான குறிப்பாக பார்க்கப்படுகிறது.
சமந்தா, "நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் சூழப்பட்டிருக்கிறேன். இது ஒரு ஆரம்பம் மட்டுமே," என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவும் ராஜும் ஏற்கனவே 'தி ஃபேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடெல்: ஹனி பன்னி' போன்ற தொடர்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தற்போது இருவரும் 'ரக்த் யுனிவர்ஸ்: தி ப்ளடி கிங்டம்' என்ற புதிய தொடரிலும் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் புதிய புகைப்படம், இந்தக் காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.