Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம்.. தவெக தலைவர் விஜய்யின் காட்டமான அறிக்கை..!

Advertiesment
Vijay

Mahendran

, திங்கள், 3 நவம்பர் 2025 (13:55 IST)
மீனவர்கள் சிறைபிடிப்பு விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய்யின் காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: 
 
தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நம் மீனவ சகோதரர்கள் 35 பேர், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு சொந்தமான மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வந்திருப்பது மன வேதனையை அளிக்கிறது. 
 
கைது செய்யப்பட்டுள்ள நம் மீனவச் சகோதரர்கள் 35 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். அவர்களது படகுகளையும் மீட்டுத்தர வேண்டும். மற்ற மாநில மீனவர்கள் மீது காட்டும் அக்கறையைப் போலவே எங்கள் மீனவர்கள் மீதும் காட்டி, இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தாமதமின்றி உடனடியாக எடுக்க வேண்டும். 
 
ஒன்றிய அரசுக்கு உரிய அழுத்தத்தைத் தமிழக அரசும் தாமதிக்காமல், உண்மையாகத் தர வேண்டும். இனி இதுபோல நடக்காமல் இருக்க, இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை ஒன்றிய அரசும் தமிழக அரசும் காண வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக அழுத்தமாக வலியுறுத்துகிறேன்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒருமைல்கல்.. வாக்காளர் பட்டியல் திருத்த பணி குறித்து தேர்தல் ஆணையர்..!