செங்கோட்டையன் 10 நாள் கெடு எதிரொலி: ஈபிஎஸ் நடத்தயிருந்த ஆலோசனை கூட்டம் ரத்து!

Mahendran
வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (12:00 IST)
அ.தி.மு.க.வின் மூத்த தலைவர் செங்கோட்டையன் விடுத்த 10 நாள் கெடுவின் எதிரொலியாக, எடப்பாடி பழனிசாமி நடத்தவிருந்த ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
செங்கோட்டையன், இன்று அளித்த செய்தியாளர் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரைகளில் தான் கலந்துகொள்ள வேண்டுமென்றால், அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என்ற தனது கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தார். மேலும், கோரிக்கைகளை நிறைவேற்ற 10 நாட்கள் கெடுவும் விதித்திருந்தார். 
 
செங்கோட்டையனின் இந்த நிபந்தனை காரணமாக, எடப்பாடி பழனிசாமி, இன்று நடத்தவிருந்த அ.தி.மு.க.வின் முக்கிய ஆலோசனை கூட்டத்தை ரத்து செய்துள்ளார். தேனியில் ஈபிஎஸ் தலைமையில் இன்று விவசாயிகளுடன் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டம் திடீர் ரத்து என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராகுல் காந்தி தொகுதியான ரேபரேலி தலித் இளைஞர் அடித்துக் கொலை: பெரும் சர்ச்சை!

படப்பிடிப்பு தளத்தில் சஷ்டி பூஜை கொண்டாடிய ஸ்மிருதி இரானி.. படக்குழு முழுவதும் பக்திமயம்..!

மாலையில் மீண்டும் தங்கம் விலை உயர்வு.. ஒரு சவரன் ரூ.90,000ஐ நெருங்கியது . 1 லட்சம் தொட்டுவிடுமா?

பீகார் தேர்தலில் 17 புதிய சீர்திருத்தங்கள்: அனைத்து தேர்தல்களிலும் தொடருமா?

மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம்: ஐபிஎல் வர்ணனையாளர் அதிரடி கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments