Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பரந்தூர் விமான நிலையம் அருகே 2 சிட்கோ தொழிற்பேட்டைகள்: 600 ஏக்கரில் அமைக்க திட்டம்..!

Advertiesment
பரந்தூர்

Mahendran

, வெள்ளி, 5 செப்டம்பர் 2025 (11:13 IST)
சென்னையின் இரண்டாவது விமான நிலையமான பரந்தூர் விமான நிலையம் அருகே இரண்டு புதிய சிட்கோ தொழிற்பேட்டைகளை அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தொழிற்பேட்டைகள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
பரந்தூர் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் நகரங்களுக்கு அருகே நிலங்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தொழிற்பேட்டையும் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.
 
இந்த தொழிற்பேட்டைகள், விமான நிலையத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் துணை தொழில் தேவைகளான உதிரிபாகங்கள் உற்பத்தி, சேவைத் துறைகள் போன்றவற்றுக்கு இந்த தொழிற்பேட்டைகள் உதவும்.
 
பரந்தூர் விமான நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்க உள்ள நிலையில், இந்தத் தொழிற்பேட்டைகள் இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துசக்தியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எனது மனதின் குரலாக பேசியுள்ளார்.. செங்கோட்டையன் பேட்டி குறித்து ஓபிஎஸ் கருத்து..!