இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வரும் நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் சரிவை சந்தித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 228 புள்ளிகள் சரிந்து 80,487 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 55 புள்ளிகள் சரிந்து 24,677 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
ஆசியன் பெயிண்ட்ஸ், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹீரோ மோட்டார்ஸ், ஜியோ ஃபைனான்ஸ், மாருதி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், சன் ஃபார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
டிசிஎஸ், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிசி, இன்ஃபோசிஸ், இண்டஸ்இண்ட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, சிப்லா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் இன்று சரிவைச் சந்தித்துள்ளன.