Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை மெட்ரோவில் 20 சதவீத பயண கட்டண சலுகை.. இந்த ஒன்றை மட்டும் செய்தால் போதும்..!

Advertiesment
சென்னை

Siva

, புதன், 30 ஜூலை 2025 (09:29 IST)
சென்னை மெட்ரோ ரயிலில்  டிஜிட்டல் பயணச்சீட்டை  பயன்படுத்தும் பயணிகளுக்கு கட்டணத்தில் 20% சிறப்புச் சலுகை வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகளின் வசதியைக் கருதி, கடந்த 2022 நவம்பர் மாதத்திலேயே டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை அறிமுகப்படுத்தியது. இந்த சலுகையைப் பெற, பயணிகள் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் உங்களது மொபைல் எண்ணை பதிவு செய்து, டிஜிட்டல் பயணச்சீட்டு வசதியை பயன்படுத்த தொடங்கலாம்.
 
மொபைல் செயலி மூலம் மட்டுமே: இந்த டிஜிட்டல் பயணச்சீட்டை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி வழியாக மட்டுமே வாங்க முடியும். ஒருமுறை ரீசார்ஜ் செய்தால், இறுதி ரீசார்ஜ் செய்யப்பட்ட நாளிலிருந்து 5 ஆண்டுகள் வரை இந்த டிஜிட்டல் பயணச்சீட்டு செல்லுபடியாகும்.
 
இதில் குறைந்தபட்சம் ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.3,000 வரை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். உங்களது பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணத் தொகை கழிக்கப்படும். இந்த நிலையில் பயன்படுத்தும் பயணிகளுக்கு கட்டணத்தில் 20% சிறப்புச் சலுகை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
இந்த 20% தள்ளுபடி மூலம், மெட்ரோ பயணிகள் தங்கள் பயணச் செலவை கணிசமாகக் குறைத்துக்கொள்ள முடியும். இது மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிக வாக்காளர்கள் நீக்கப்பட்டால் நாங்கள் தலையிடுவோம்: சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள்..!