Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து! மாநகராட்சி அறிவிப்பு..!

Advertiesment
சென்னை

Siva

, புதன், 30 ஜூலை 2025 (08:09 IST)
செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய குழாய் இணைக்கும் பணி நடைபெறுவதால், சென்னையில் இன்று அதாவது ஜூலை 30 காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1 இரவு 10 மணி வரை மூன்று நாட்களுக்கு குடிநீர் விநியோகம் ரத்து செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.
 
இதன் காரணமாக, சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளான அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது.
 
லாரிகள் மூலம் குடிநீர்: அவசரத் தேவைகளுக்கு, பொதுமக்கள் cmwssb.tn.gov.in  என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பதிவு செய்தால், லாரிகள் மூலம் குடிநீர் கொண்டுவரப்படும் என குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
 
குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு, குடிநீர் தொட்டிகள் மற்றும் தெருக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும்.
 
குழாய் இணைப்பு பணிகள் முடிந்ததும், குடிநீர் விநியோகம் வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்றும் குடிநீர் வாரியம் உறுதி அளித்துள்ளது.
 
பொதுமக்கள் இந்த சிரமங்களைத் தவிர்க்க, தேவையான அளவு தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபரேஷன் சிந்தூர்' குறித்து அவதூறு பரப்பிய ஆசிரியை.. ஒரு படித்தவர் இப்படி செய்யலாமா? நீதிமன்றம் கண்டனம்..!