கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் நிதி உதவி செய்யப்படும் என சமீபத்தில் முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தை நாளை முதல்வர் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பலர் உயிரிழந்து வரும் நிலையில் கொரோனாவால் தந்தை தாய் என இருவரையும் இழந்த குழந்தையின் பெயரில் ரூபாய் 5 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றும் அந்த குழந்தை 18 வயது நிறைவடையும் போது அந்த தொகை வட்டியுடன் குழந்தைக்கு வழங்கப்படும் என தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவித்திருந்தார்
இந்த திட்டத்தை நாளை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். நாளை தலைமைச் செயலகத்தில் இந்த திட்டத்தை அவர் தொடங்கி வைக்கப் போவதாகவும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு அவர் ரூபாய் ஐந்து லட்சத்தை டெபாசிட் செய்ய உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 3 லட்சம் வழங்கும் திட்டமும் நாளை தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது