சதீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு மிகவும் அரிய வகை நோய் ஏற்பட அதற்கான சிகிச்சைக்காக 16 கோடி ரூபாய் செலவாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் யோகேஷ் குப்தா மற்றும் ரூபல் குப்தா. இவர்களின் மூன்று வயது மகன் அயான்ஷ் பிறவியிலேயே ஸ்பைனல் மஸ்குலர் அட்ரஃபி (எஸ்எம்ஏ) என்ற முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப் பட்டான்.இந்நிலையில் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்றால் ஜொல்ஜென்ஸ்மா (ZOLGENSMA) எனப்படும் மருந்தை ஊசி அமெரிக்காவில் இருந்து வரவழைக்கவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் அந்த ஊசியின் விலையைக் கேட்டதும்தான் பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். அந்த ஊசியின் விலை இந்திய மதிப்பில் சுமார் 16 கோடி ரூபாயாம். இதையடுத்து எப்படியாவது மகனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று பெற்றோர் சமூகவலைதளம் மூலமாக நிதி திரட்ட ஆரம்பித்தனர். அதில் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல பிரபலங்கள் நிதி அளித்தனர். சுமார் 65000 பேர் நிதி அளித்த பின்னர் 16 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இதையடுத்து ஊசி வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த ஊசிக்கான இறக்குமதி வரியான 6 கோடியை ஒன்றிய அரசு ரத்து செய்தது. அதன் பின்னர் சிறுவனுக்கு ஊசி போடப்பட்டு சில மணி நேரக் கண்காணிப்புக்குப் பின்னர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளான்.