Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவால் இறந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து 40000 ரூபாய் அபேஸ்… சிக்கிய பெண்!

Advertiesment
கொரோனாவால் இறந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து 40000 ரூபாய் அபேஸ்… சிக்கிய பெண்!
, வியாழன், 10 ஜூன் 2021 (17:49 IST)
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவரின் வங்கிக் கணக்கில் இருந்து செவிலியர் ஒருவர் 40000 ரூபாய் பணத்தை எடுத்தது அம்பலமாகியுள்ளது.

பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே வசித்து வந்தவர் ராஜேஷ்.இவர் கொரோனா வந்து தனியார் மருத்துவமனையில் மே 17 ஆம் தேதி சேர்ந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி மே 23 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவரின் மனைவி ராஜேஷின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை சோதித்த போது அதில் 43000 ரூபாய் அளவுக்கு மாயமாகி இருந்தது. இது சம்மந்தமாக வங்கியில் விசாரித்த போது ஒரு பெண்ணின் வங்கிக்கணக்குக்கும் மொபைல் எண்ணுக்கும் ரீசார்ஜ் செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

அந்த பெண் யார் என விசாரித்ததில் ராஜேஷ் அனுமதிக்கப்பட்டு இருந்த மருத்துவமனையில் கொரோனா வார்டில் வேலை செய்து வந்த செவிலியர் ஆன்சி ஸ்டான்லி எனத் தெரியவந்துள்ளது. ராஜேஷ் உயிரோடு இருந்த போது ஆன்ஸி அவர் எண்ணுக்கு மொபைலில் ரீசார்ஜ் செய்து தர சொல்லியுள்ளார். ராஜேஷும் செய்து கொடுத்துள்ளார். அப்போது அவரின் செல்போன் பாஸ்வேர்டு மற்றும் வங்கி பாஸ்வேர்ட் ஆகியவற்றை தெரிந்துகொண்ட ஆன்ஸி, ராஜேஷ் தூங்கும்போது தனது வங்கிக் கணக்கு 40000ரூபாய் அனுப்பிக்கொண்டுள்ளார். இதையடுத்து ஆன்ஸி கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜூன் 14 ஆம் தேதி அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டம்!