Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'கொங்குநாடு' எனப் பதிவிட்டது அச்சுப்பிழை - அமைச்சர் எல். முருகன்

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (17:38 IST)
கடந்த சில நாட்களாக தனி கொங்குநாடு என்ற விவாதம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் இதற்கு கொங்குநாடு என பதிவிட்டது அச்சுப்பிழையே என முன்னாள் பாஜக தலைவரும்  மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கோவை உள்ளிட்ட கொங்கு மாவட்டங்களை கொண்ட கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக நேற்றைய தினசரியில் செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலான நிலையில், தமிழகத்தை பிரிக்க முடியாது என திமுக எம்.பி கனிமொழி கூறினார். அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் கேபி.முனிசாமி, கொங்குநாடு சிந்தனை என்பது தமிழ்நாட்டின் அமைதியை பாதிக்கும் எனவும் யாரையோ சிறுமைப்படுத்த வேண்டுமென்று பாஜகவின் இப்படிக் கூறியுள்ளனர் எனத் தெரிவித்தார்.

இந்த விவாதங்கள் இன்னும் ஓயாத நிலையில், கொங்குநாடு என பதிவிட்டது அச்சுப்பிழையே என முன்னாள் பாஜக தலைவரும்  மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: அமைச்ச்சரவை மாற்றத்தின் போது நான் எழுதிய விவரக்குறிப்பில் கொங்குநாடு என இடம்பெற்றது தட்டச்சுப் பிழையே எனத் தெரிவித்துள்ளார். இது பாஜகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் உள்ள முக்கிய பூங்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: 3 பேர் பரிதாப பலி!

போலி கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்ட யுஜிசி.. மாணவர்கள் ஜாக்கிரதை..!

இவ்வளவு பணம் கொடுக்கிறோம்.. எங்களுக்கு என்ன கொடுக்குறீங்க? என்ற வாதமே தப்பு: நிர்மலா சீதாராமன்

சுனிதா வில்லியம்ஸ்க்கு சொந்த பணத்தில் சம்பளம்.. ட்ரம்ப் அறிவிப்பு..!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments