கொரொனா 3 வது அலை குறித்து சாமியார் நித்யானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட சுமார் 111 நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரொனாவான டெல்டாவகை வைரஸ் மீண்டும் பிற பகுதிகளுக்கும் பரவும் என ஆபத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது .
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தில் தலைவர் பெட்ரோஸ் கூறியுள்ளதாவது: டெல்டா மரமணு வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. பொதுமக்கள் அதிகம் பொது இடங்களில் கூடுவதாலும் இத்தொற்று அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரொனா 3 வது அலை குறித்து இந்திய போலீஸாரால் தேடப்பட்டு வருபவரும் கைலாசா நாட்டில் வசிபத்து வருபவருமான நித்யானந்தா கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது காலடி இந்தியாவில் பட்டால்தான் கொரொனா தொற்று அங்கிருந்து வெளியேறும். வரும் புரட்டாசி மாதம் கொரொனா 3 வது அலை பரவும்…. மக்கள் சுதந்திரமாக நடமாடுவதைப்பார்த்தால் கொரொனாவை மக்கள் வரவேற்பதுபோல் இருக்கி்றது.
கொரோனா முதல் இரண்டாம் அலைகளைவிட டெல்டா பிளஸ், லம்டா வைரஸ்கள் ஆபத்தானவை. இந்த வைரஸ்கள் கொரொனாவின் அப்டேட்டுகளாக வந்துள்ளது…கொரோனா 3 வது அலை மோசமானதாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.