இன்று கோடம்பாக்கத்தில் பெரும் பரபரப்பாக பேசப்படும் செய்தி ரஜினி சுந்தர் சி கமல் கூட்டணி பற்றித்தான். ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் என காலத்திற்கும் மறக்காத இரு படங்களை இரு ஜாம்பவான்களை வைத்து எடுத்திருக்கிறார் சுந்தர் சி. இன்று இந்த மூன்று பேரும் கூட்டணி வைத்திருக்கிறார்கள். இதற்கிடையில் சுந்தர் சி கடந்து வந்த பாதை பற்றி சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
காமெடி வேணுமா காமெடி இருக்கு. ஹாரர் வேணுமா ஹாரர் இருக்கு. ஆக்ஷன் வேணுமா ஆக்சன் இருக்கு. ஐட்டம் சாங் வேணுமா அதுவும் இருக்கு .இப்படி பக்காவான ஃபேமிலி என்டர்டெய்ன் படங்களுக்கு சொந்தக்காரர் சுந்தர்சி. 2012ல் எடுத்த ஒரு படத்தை 2025 இல் ரிலீஸ் செய்து மாபெரும் வெற்றியாக்கியவர். இயக்கம், நடிப்பு என இரண்டிலுமே கலக்கும் ஒரு சகலகலா வல்லவன் தான் சுந்தர்சி.
முறைமாமன் படத்தில் தொடங்கி மூக்குத்தி அம்மன் 2 வரைக்கும் அவருடைய படங்களின் மொத்த எண்ணிக்கை 38 .என்னது 38 படங்களா என்று ஆச்சரியப்பட்டு கேட்கும் அளவிற்கு அவருடைய லிஸ்ட் இருக்கிறது .இதெல்லாம் சுந்தர் சி இயக்கிய படங்களா என்றும் ஆச்சரியத்துடன் கேட்க வைக்கிறது அவர் இயக்கிய படங்கள். அருண் விஜய் நடித்த முறை மாப்பிள்ளை, கார்த்திக் நடித்த உள்ளத்தை அள்ளித்தா, சரத்குமார் நடித்த ஜானகிராமன், பிரபுதேவா நடித்த நாம் இருவர் நமக்கு இருவர் .
கார்த்திக் பிரபுதேவா நடித்த உள்ளம் கொள்ளை போகுதே, பிரசாந்த் நடித்த வின்னர், அர்ஜுன் நடித்த கிரி, நகரம், கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை 4 பாகங்கள் ,ஆம்பள ,ஆக்சன் என அவருடைய லிஸ்ட் ரொம்ப பெருசு. இதில் இரண்டு முக்கிய ஜாம்பவான்கள் படங்களும் இருக்கின்றது. அந்தப் படத்தில் வருகிற இரண்டு வசனங்கள் தான் இது.
ஐயா மீசை வைத்தவன் எல்லாம் ஆம்பள கிடையாது. மீசை முளைச்ச பிறகு அப்பாவுக்கு இவ்வளவு சொத்து இருந்தால் கூட அதில் ஒரு பைசா கூட தொடாம தன் உழைப்பால் உழைத்து அவங்களுக்கு யாரு சோறு போடுறானோ அவன் தான் ஆம்பள. அடுத்ததாக முன்ன பின்ன தெரியாத ஒரு பையனுக்காக கண்ணீர் விடுகிற அந்த மனசு இருக்கே. அதான் கடவுள். செய்கிற தப்ப எல்லாம் பண்ணிட்டு உண்டியலில் காசு போட்டு விடுவீங்க. உங்க பாவத்தை எல்லாம் மன்னிச்சு கடவுள் காப்பாற்றுவார். அதுக்கு பேரு கடவுளே இல்லை. கூலி.
ஏனெனில் அவரும் காசு வாங்கிட்டு தானே செய்கிறார். இப்படி ரஜினியின் அருணாச்சலம் கமல்ஹாசனின் அன்பே சிவம் படம் இந்த இரு படங்களின் வசனங்கள் தான் அது. இன்று இந்த மூன்று பேரும் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள் .கமல் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போகிறார். 2027 பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகப்போகிறது. சுந்தர் சி யின் மாயாஜாலத்தை மீண்டும் தெரிவிக்கிற படமாக இது நிச்சயமாக இருக்கப் போகிறது.