தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மாநிலம் முழுவதும் நடைப்பயணத்தில் பங்கேற்க உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஒரு சிறப்பு மகளிர் பேரணியில் கலந்துகொள்ள உள்ளார்.
இந்த நிகழ்ச்சிகளைச் சிறப்பாக ஒருங்கிணைப்பதற்காகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அவர்கள் ஒருங்கிணைப்புக் குழுக்களை அறிவித்துள்ளார்.
இந்த குழுக்களில் கே.வி. தங்கபாலு, சு. திருநாவுக்கரசர், கே.எஸ். அழகிரி, எஸ். ஜோதிமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு மக்கள் ஆதரவை திரட்டும் விதமாக இந்த தேசிய தலைவர்களின் பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.