மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், த.வெ.க. கூட்டணி குறித்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்தார்.
"அ.தி.மு.க. சட்டப்பூர்வமான பிரதான எதிர்க்கட்சி" என குறிப்பிட்ட அவர், கடந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் என்பது வெறும் 1,92,000 வாக்குகள் வித்தியாசத்தில்தான் நிகழ்ந்தது என்றார்.
இந்தச் சிறிய வாக்குப் பற்றாக்குறை கூட்டணிக்கு கிடைத்திருந்தால், 'உள்குத்து, வெளிகுத்து, ஊமைக் குத்து' இல்லாமல் இருந்திருந்தால், நாங்கள் வெற்றி பெற்றிருப்போம். அதன் பொருள் வாங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும்" என்று கூட்டணிக்குள் நடந்த துரோக செயல்களை மறைமுகமாகக் குற்றம் சாட்டினார்.
கூட்டணி குறித்துப் பேசுவதற்கு இது நேரமில்லை என்றும், தற்போது மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கூட்டணி குறித்த முடிவுகளை பற்றி பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்கு பிறகு கேட்குமாறு கூறிய அவர், "யார் பேச வேண்டுமோ, அவர்கள் பேசினால்தான் அனைத்தும் நடக்கும்" என்று தவெக கூட்டணி குறித்து மறைமுகமாக கூறினார்.