அமைச்சர் பொன்முடியின் சொத்து கோப்பு வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் எடுத்த நிலையில் அந்த வழக்கு அக்டோபர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996 - 2001 ஆம் ஆண்டில் அமைச்சர் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கை விசாரணை செய்த விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவில்லை என்ற நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் தாமாக முன்வந்து மறு ஆய்வு விசாரணைக்கு எடுத்தார். மேலும் இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை, அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் திடீர் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மாற்றப்பட்ட நிலையில் தற்போது நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் இந்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என பொன்முடி தரப்பில் கோரிக்கை விடப்பட்ட நிலையில் இந்த வழக்கின் விசாரணையை அக்டோபர் 19ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.