Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு ரூ.17,742 கட்டணம்: வங்கிக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்..!

பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு ரூ.17,742 கட்டணம்: வங்கிக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்..!
, வெள்ளி, 6 அக்டோபர் 2023 (17:01 IST)
பயன்படுத்தாத கிரெடிட் கார்டுக்கு 17,742 ரூபாய் கட்டணம் விதித்த வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முத்து குமார் என்பவர்  பாரத ஸ்டேட் வங்கியில் வங்கியில் கணக்கு வைத்துள்ளார்.  இவரது வங்கி வரவு செலவு சிறப்பாக இருப்பதை அறிந்து அவருக்கு வங்கியின் சார்பில் கிரெடிட் கார்டு கொடுக்க முடிவு செய்தது.

இவர் வேண்டாம் என்று மறுத்த நிலையில் கட்டணம் ஏதுமில்லை, நீங்கள் பயன்படுத்தினால் மட்டுமே கட்டணம் என்று வற்புறுத்தி கிரெடிட் கார்டை கொடுத்ததாக இருக்கிறது. ஆனால் முத்துக்குமார் கிரெடிட் கார்டை பயன்படுத்தவே இல்லை.

இந்த நிலையில்  வங்கியில் இருந்து கிரெடிட் கார்டுக்கு பணம் பிடிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து முத்துகுமார் கிரெடிட் கார்டை திரும்ப கொடுத்துவிட்டார். கிரெடிட் தனக்கு தேவை இல்லை என்றும் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்றும் மனு அளித்திருந்தார்.

ஆனால் தொடர்ச்சியாக வாடிக்கையாளர் வங்கி கணக்கிலிருந்து  பணம் குறைக்கப்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு வரை 17742 ரூபாய் வங்கி கணக்கிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு வங்கி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

இதனை அடுத்து முத்துக்குமார் நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் நீதிபதி இந்த மனுவை விசாரித்து  17,742 ரூபாய் அபராதம் விதித்தார்.  மேலும் நஷ்ட ஈடாக வங்கி சார்பில் ரூ.10 ஆயிரம், நோடல் அதிகாரியும் கார்டுகளை கவனிக்கும் பொது மேலாளர் இணைந்து அந்த தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி வழக்கு செலவிற்கு ரூ.4,000 வழங்க வேண்டும் எனவும், மொத்தமாக 24 ஆயிரம் ரூபாய் வாடிக்கையாளருக்கு வங்கி வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார். மேலும் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.17,742-ஐ திருப்பி வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று இரவு 15 மாவட்டங்களில் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம்