Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேங்கை வயல் விவகாரம்: மேலும் 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை

வேங்கை வயல் விவகாரம்: மேலும் 6 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை
, வெள்ளி, 6 அக்டோபர் 2023 (18:13 IST)
வேங்கை வயல் விவகாரம் கடந்த சில மாதங்களாக தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் மேலும் ஆறு பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

வேங்கை வயல் விவகாரத்தில் மேலும் ஆறு பேருக்கு டிஎன்ஏ சோதனை செய்ய நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.  சம்பந்தப்பட்ட ஆறு பேர் டிஎன்ஏ பரிசோதனைக்கு ரத்த மாதிரி கொடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

 இந்த வழக்கில் ஏற்கனவே நான்கு சிறுவர்கள் உள்பட 25 பேருக்கு டிஎன்ஏ மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டது. ஆனால் உடல்நிலை சரியில்லை என கூறிய ஒருவருக்கு மட்டும் உடல் நிலையை பொறுத்து பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் வேங்கை வயல் விவகாரம் குறித்து ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு அதன் தலைவர் நீதியரசர் சத்யநாராயணன் நியமனம் செய்யப்பட்டார். அவர் மாவட்ட ஆட்சியருடன் இது குறித்து ஆலோசனை நடத்துவார் என்றும், ஆலோசனைக்கு இந்த விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை தேவையில்லை, சரியான பாதையில் விசாரணை சென்று கொண்டுள்ளதாகவும் அவர் கருத்து கூறினார்.

புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் புழங்கும் குடிநீர் டேங்கில் மர்ம நபர்கள் மலத்தை கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து அங்கு தீண்டாமை கொடுமைகள் நடப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிப்பதா? அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!