Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

Mahendran
சனி, 26 ஜூலை 2025 (10:25 IST)
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டுள்ள "உரிமை மீட்பு நடைபயணத்துக்கு" தடை விதிக்கப்படவில்லை என்று தமிழ்நாடு டிஜிபி அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது. 
 
இந்த பயணத்தால் வட மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறி, பயணத்தை தடை செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸ் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் அன்புமணியின் நடைபயணத்திற்கு தடை விதிக்கப்பட்டதாக நேற்று சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியது. ஆனால், டிஜிபி அலுவலகம் இதனை மறுத்துள்ளது.
 
பொதுவாக, அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள் எந்த பகுதியில் நடைபெறுகிறதோ, அந்த பகுதி காவல் நிலையங்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களில்தான் இது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும். இது ஒரு வழக்கமான நடைமுறை.
 
அதேபோல், டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள மனு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை சரியாக புரிந்து கொள்ளாமல், அன்புமணியின் நடைபயணத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியுள்ளது. "அன்புமணி ராமதாஸின் நடைபயணத்துக்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை" என்று டிஜிபி அலுவலகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவின் வளர்ச்சிக்கு எலான் மஸ்க் கண்டிப்பாக வேண்டும்: பல்டி அடித்த டிரம்ப்..!

அன்புமணியின் நடைப்பயணத்திற்கு தடையா? டிஜிபி அலுவலகம் விளக்கம்..!

முதல்வர் ஸ்டாலினுக்கு 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தம்.. எப்போது டிஸ்சார்ஜ்?

இன்று 17 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து: சிறப்பு ரயில்களின் முழு விவரங்கள்..!

பீகாரில் 35 லட்சம் வாக்காளர்களை காணவில்லை.. தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments