தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவரான பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது தமிழகத்தில் உயிரோடிருக்கும் அரசியல் தலைவர்களில் மூத்தவராகவும் உள்ளார். வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி என அடுத்தடுத்து அரசியலில் ஏற்றம் கண்டவர் ராமதாஸ். ஒரு காலத்தில் அவர் தமிழகத்தின் ஆட்சியையே நிர்ணயிக்கும் சக்தியாகவும் உருவெடுத்தார்.
ஆனால் சமீபகாலமாக அவரது கட்சியான பாமக ஒரு தேக்க நிலையை அடைந்துள்ளது. அவரது மகன் அன்புமணி ராமதாஸ் மற்றும் அவருக்கு இடையே கட்சியைத் தலைமை தாங்குவதில் ஒரு பனிப்போரே நடந்து வருகிறது.
இந்நிலையில் இன்று ராமதாஸின் பிறந்தநாளை முன்னிட்டு சேரன் இயக்கத்தில் உருவாகும் ராமதாஸின் பயோபிக் படமான அய்யா படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஆரி அர்ஜுனன் ராமதாஸாக நடிக்கிறார். ஜி கே எம் தமிழ்க்குமரன் இந்த படத்தைத் தயாரிக்கிறார்.