Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்: நடைப்பயணம் தொடங்குகிறார் அன்புமணி..!

Advertiesment
அன்புமணி ராமதாஸ்

Siva

, புதன், 23 ஜூலை 2025 (12:29 IST)
தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற நடைப்பயணத்தை ஆரம்பிக்க இருக்கும் பாமக தலைவர் அன்புமணி ‘ உரிமை மீட்க... தலைமுறை காக்க’ இலட்சினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 
 
இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டிருக்கும் 1. சமூக நீதிக்கான உரிமை, 2. வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை,  3. வேலைக்கான உரிமை,  4. விவசாயம் மற்றும் உணவுக்கான உரிமை , 5. வளர்ச்சிக்கான உரிமை, 6. நல்லாட்சி  மற்றும் அடிப்படை சேவைகளுக்கான உரிமை, 7. கல்வி, நலவாழ்வுக்கான உரிமை ,8. மது-போதைப் பொருள்களால் பாதிக்கப்படாமல் இருக்கும் உரிமை , 9. நீடித்திருக்கும் நகர்ப்புற வளர்ச்சிக்கான உரிமை , 10. ஆரோக்கியமான சுற்றுச்சூழலுக்கான உரிமை  ஆகிய 10 வகையான அடிப்படை உரிமைகளும் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்காமல் திமுக அரசு தடுத்து வருகிறது.
 
அந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும், அதன் மூலம் தமிழக மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க வகை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் நாளை மறுநாள் (ஜூலை 25-ஆம் நாள்) வெள்ளிக்கிழமை தொடங்கி  தமிழ்நாடு நாளான நவம்பர் 1-ஆம் தேதி வரை  தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் என்ற தலைப்பில் நடைபயணம் மேற்கொள்ளவிருகிறேன்.  செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில்  தொடங்கும் இந்த பயணம் தருமபுரியில் நிறைவடையவுள்ளது.
 
இந்த பயணத்திற்காக  ‘ உரிமை மீட்க... தலைமுறை காக்க’  என்ற இலட்சினை  தயாரிக்கப்பட்டுள்ளது.   உங்கள் பார்வைக்காக அந்த இலட்சினையை இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.14.69 கோடி போதை பொருளை கடத்தில் இளம்பெண்கள்.. சோப்புகளில் மறைத்து கடத்தல்..!