தமிழகத்தில் திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்ளிட்ட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருச்சியில் உள்ள அப்சல் கான் என்பவரது வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
தஞ்சை மாவட்டம், திருபுவனம் அருகே 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதமாற்றம் தொடர்பான மோதலில் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்து வந்த என்ஐஏ, ராமலிங்கம் கொலை தொடர்பாக 10 இடங்களில் சோதனை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேகம்பூர் ஜின்னா நகரில் SDPI மாவட்ட பொருளாளர் ஷேக் அப்துல்லா வீடு, ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த யூசுப் வீடு மற்றும் கொடைக்கானல், நிலக்கோட்டை ஆகிய இடங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக, நான்கு மாதங்களுக்கு முன்பு கொடைக்கானலில் ஏற்கனவே ஒரு சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.