பாஜகவில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்ல உள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் இது குறித்து பேசியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் மற்றும் பாஜகவில் முக்கிய தலைவராக அறியப்படும் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இருந்து விலகி வேறு கட்சிக்கு செல்ல உள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து அவர் தனது வெளிப்பட்டுத்தியுள்ளார்.
அதிமுகவில் பல முக்கிய இலாக்காக்களின் அமைச்சராக வலம் வந்த இவர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிறிது காலம் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி 2017 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் இராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியை எதிர்பார்த்து காய் நகர்த்தினார்.
பாஜக தலைவராக இறுதிச் சுற்று வரை இவரது பெயர் பரீசீலனையில் இருந்தது, ஆனால் யாரும் எதிர்பார்ககாத வகையில் முருகன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் இவர் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. எனவே கட்சி மாற உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து நயினார் நாகேந்திரன் கூறியதாவது, பாஜக தலைமை மீது வருத்தம் இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற நிர்வாகிகள் நியமனம் வேதனை அளிக்கிறது. நம்பிக்கையோடு பாஜகவில் வந்தவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.
அதற்காக நான் கட்சி மாறப்போகிறேன் என வெளியாகும் தகவல் உண்மையில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜகவில் அனுபவமிக்கவர்கள் இருப்பது அவசியம் என தெரிவித்துளார்.